/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து துறையில் 'காண்ட்ராக்ட்' முறை ;ஊழியர்கள் குற்றச்சாட்டு
/
போக்குவரத்து துறையில் 'காண்ட்ராக்ட்' முறை ;ஊழியர்கள் குற்றச்சாட்டு
போக்குவரத்து துறையில் 'காண்ட்ராக்ட்' முறை ;ஊழியர்கள் குற்றச்சாட்டு
போக்குவரத்து துறையில் 'காண்ட்ராக்ட்' முறை ;ஊழியர்கள் குற்றச்சாட்டு
ADDED : பிப் 19, 2025 10:15 PM

அன்னுார்; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி. யு.சி., ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் சந்திப்பு இயக்கம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இதில் அன்னுாரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கிளை முன் நேற்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்து சி.ஐ.டி.யு.,நிர்வாகிகள் பேசியதாவது :
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பள ஒப்பந்தம் ஏற்பட்டால், அதன் முழு செலவையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அப்போதைய முதல்வர் பழனிச்சாமிடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால் ஸ்டாலின் முதல்வராகி நான்காண்டுகள் ஆகியும் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. ஓய்வு பெற்று 20 மாதங்களாகியும் ஓய்வு கால பலன்கள் கிடைக்கவில்லை. பஸ்களின் எண்ணிக்கையை குறைத்து, புதிய பணியாளர் நியமனத்தை தடுத்து, காண்ட்ராக்ட் முறையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இரண்டு லட்சம் ஊழியர்கள் சம்பள உயர்வு, விலைவாசி படி, ஓய்வு காலப் பயன்கள் எதுவும் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் வேலை நிறுத்தம் செய்ய தயாராக உள்ளோம்.' என்றனர்.
சந்திப்பு இயக்கத்தில் சி.ஐ.டி.யு., கிளை செயலாளர் பாலசுப்பிரமணியம், தலைவர் வேலுமணி, ஏ.ஐ.டி.யு.சி., கிளை செயலாளர் பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.

