/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகத்தடை இல்லாத சாலையில் பைக் மோதி கண்டக்டர் மரணம்
/
வேகத்தடை இல்லாத சாலையில் பைக் மோதி கண்டக்டர் மரணம்
வேகத்தடை இல்லாத சாலையில் பைக் மோதி கண்டக்டர் மரணம்
வேகத்தடை இல்லாத சாலையில் பைக் மோதி கண்டக்டர் மரணம்
ADDED : நவ 09, 2025 11:20 PM
கோவை: கவுண்டம்பாளையம் அரசு குடியிருப்பை சேர்ந்தவர் ரவீந்திரன், 47; கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை, பணி முடிந்து அப்பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரோட்டில் மயக்கமடைந்து விழுந்த ரவீந்திரனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கவுண்டம்பாளையம் அரசு குடியிருப்பு அருகே உள்ள மேம்பாலத்தின் அருகில், வேகத்தடை எதுவும் இல்லை. இதன் காரணமாக அவ்வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

