/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்., தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
/
கே.எம்.சி.எச்., தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
கே.எம்.சி.எச்., தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
கே.எம்.சி.எச்., தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ADDED : நவ 09, 2025 11:20 PM

கோவை: இந்திய மருத்துவ சேவையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கிளையின் இரண்டாவது பதிப்பு மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா அவிநாசி ரோடு, மெர்லிஸ் ஹோட்டலில் நடந்தது. எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெயராம் வரதராஜன் துவக்கி வைத்தார்.
மாநாட்டில், இந்திய மருத்துவ சேவையாளர்கள் சங்கம் சார்பில், கே.எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்திய சுகாதார சேவை வழங்குவோர் சங்கத்தின் தலைவர் கிரிதர் கியானி பேசுகையில், “காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தவும், குறைகளை களையவும், முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.
சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் அலெக்சாண்டர் தாமஸ், இந்திய சுகாதார சேவை வழங்குவோர் சங்கத்தின் தமிழக பிரிவு தலைவர் சதீஷ் தேவதாஸ், கங்கா மருத்துவமனை தலைவர் ராஜசேகரன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் ராஜசபாபதி, இயக்குனர் ரமா, கே.எம்.சி.எச். இயக்குனர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

