ADDED : பிப் 12, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
கோவை: உக்கடம் அருகே மரக்கடை, திருமால் வீதியை சேர்ந்தவர் நவீன்குமார். காந்திபுரம்-டவுன்ஹால் செல்லும் மினி பஸ்சில் கண்டக்டராக பணிபுரியும் இவர் 9ம் தேதி இரவு பணி முடித்து அதே பஸ்சில் வீடு திரும்பினார்.
டவுன்ஹால் அருகே பஸ் வந்தபோது அருகே நின்றிருந்த இருவர் நவீன்குமார் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து ஓட்டம் பிடித்தனர். நவீன்குமார் கண்டக்டர், டிரைவர் உதவியுடன் இருவரையும் துரத்தி பிடித்து உக்கடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் காந்திபுரம் சாஸ்திரி நகரை சேர்ந்த இளமுருகன்(எ) கபாலி(43) மற்றும் திருவள்ளூர் விஷ்ணு அமர்நாத்(27) என்பது தெரிந்தது. செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
