/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்திய தொழில் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி
/
இந்திய தொழில் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி
ADDED : ஏப் 07, 2025 05:34 AM
கோவை; இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சிலின் 2025-26ம் ஆண்டிற்கான உறுப்பினர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், கோவை சொடல்டெக் குழும நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் பாலமுருகன் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், நான்காவது முறையாக தேசிய கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தேர்தலில் தொடர்ந்து 10 முறையும், தென் மண்டல கவுன்சில் தேர்தலில் ஐந்து முறையும், பாலமுருகன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் தீர, இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் மூலம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப் பாடுபடுவேன் என கோவை சொடல்டெக் குழும நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் பாலமுருகன் தெரிவித்தார்.

