தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'தன்னம்பிக்கையால் எத்தகைய நெருக்கடியையும் சமாளிக்கலாம்'

'தன்னம்பிக்கையால் எத்தகைய நெருக்கடியையும் சமாளிக்கலாம்'

'தன்னம்பிக்கையால் எத்தகைய நெருக்கடியையும் சமாளிக்கலாம்'


ADDED : மார் 09, 2024 08:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 08:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை : நவஇந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில், சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை முதன்மை நிர்வாக அலுவலர் ஸ்வாதி தலைமை வகித்தார்.

கோவை வருமானவரி துணை ஆணையர் ப்ரயதி சர்மா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மகளிர் மேம்பாட்டு மைய சாதனை மலரை வெளியிட்டார்.

அவர் மாணவிகளிடையே பேசுகையில், ''தன்னம்பிக்கை இருந்தால், எத்தகைய நெருக்கடியான சூழலையும், பெண்கள் எதிர்கொள்ள முடியும். வருமானம் ஈட்டுவதன் மூலம் தங்களுக்கான தேவைகளை, தாங்களே நிறைவேற்றிக் கொள்ளலாம். சொந்தமாக முடிவெடுக்கவும் பழக வேண்டும். உங்களுக்கான வாழ்க்கையை வாழவும் கற்றுக் கொள்ளுங்கள்,'' என்றார்.

தொடர்ந்து, மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவில், கல்லுாரி முதல்வர் சிவக்குமார், மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் கவிதா, செயலர் ரேகா, பொருளாளர் வித்யா மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us