ADDED : நவ 23, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சரவணம்பட்டி: போலீசார் அத்திப்பாளையம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரிடம் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்கள் இருந்தன. அவர் துாத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பெருமாள், 38 எனத் தெரிந்தது. அவரை சிறையில் அடைத்த போலீசார், 401 பாக்கெட் புகையிலைப் பொருட்களை பறி முதல் செய்தனர்.

