/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய தொழிலாளர் சட்டம் வரவேற்கிறது 'டான்சியா'
/
புதிய தொழிலாளர் சட்டம் வரவேற்கிறது 'டான்சியா'
ADDED : நவ 23, 2025 04:37 AM
கோவை: புதிய தொழிலாளர் குறியீடுகளை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்ததை, தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறு தொழில் சங்கம் வரவேற்றுள்ளது.
தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறு தொழில் சங்க துணைத் தலைவர் சுருளிவேல் செய்திக்குறிப்பு:
புதிய தொழிலாளர் குறியீடுகளை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்ததை வரவேற்கிறோம். 29 தனித்தனியான சட்டங்களை, 4 முக்கிய குறியீடுகளாக ஒருங்கிணைத்தது, தொழிலும், தொழிலாளர்களும் பயனடையும் முன்னேற்றமான மாற்றமாகும்.
அனைத்து ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவது கட்டாயம், ஒரு வருட சேவை முடித்தாலே, கிராஜுவிட்டி பெறும் உரிமை, இந்திய அளவில் ஒரே மாதிரியான குறைந்தபட்ச சம்பள அமைப்பு, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் குழப்பத்தை நீக்குகிறது.
இந்த மாற்றங்கள், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உயர்த்துவதோடு, தொழில் வளர்ச்சி, வெளிப்படைத் தன்மை, மற்றும் வேலை வாய்ப்பின் முறையான அமைப்புகளை அதிகரிக்க உதவுகின்றன. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

