/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிர்வாகத்துடன் மோதல்; தி.மு.க. கவுன்சிலர் ராஜினாமா
/
நிர்வாகத்துடன் மோதல்; தி.மு.க. கவுன்சிலர் ராஜினாமா
நிர்வாகத்துடன் மோதல்; தி.மு.க. கவுன்சிலர் ராஜினாமா
நிர்வாகத்துடன் மோதல்; தி.மு.க. கவுன்சிலர் ராஜினாமா
ADDED : அக் 07, 2025 11:08 PM
அன்னுார்; தி.மு.க., கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளார்.
அன்னுார் பேரூராட்சிக்கு கடந்த 2022ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க., ஏழு வார்டுகளில் வெற்றி பெற்றது. தி.மு.க.,வைச் சேர்ந்த பரமேஸ்வரன் பேரூராட்சி தலைவராக உள்ளார்.
ஒன்பதாவது வார்டில் இரண்டாவது முறை தொடர்ந்து வெற்றி பெற்ற தி.மு.க., கவுன்சிலர் காஞ்சனா சிவக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்து பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் கடந்த 30ம் தேதி கடிதம் அளித்தேன். எனினும் ஒப்புதல் தரவில்லை.
எனவே, பதிவு தபால் வாயிலாக கோவை கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளேன், என்றார்.
ஒன்பதாவது வார்டில் மிகக் குறுகிய பகுதியில் ஒரு திருமண மண்டபம் கட்ட பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதற்கு கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாகவே அதிருப்தி அடைந்து கவுன்சிலர் ராஜினாமா செய்திருப்பதாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
கவுன்சிலர் பதவி காலம் முடிவடைய இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது.