/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவில் தேருக்கு புதிய 'ஷெட்'
/
அரங்கநாதர் கோவில் தேருக்கு புதிய 'ஷெட்'
ADDED : அக் 07, 2025 11:07 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ஆறு மாதங்களுக்கு பின் பாதுகாப்பு ஷெட் அமைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். பழமையான இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இவ்விழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர். தேர்த் திருவிழா முடிந்த பின், தேர் மழையில் நனையாமலும், வெயிலில் காயாமலும் இருக்க, தகர ஷீட்டால் பாதுகாப்பு ஷெட் அமைக்கப்படும்.
பழைய தகர ஷீட்டுகள் மழையில் நனைந்ததால் துருப்பிடித்தது. அதனால் துருப்பிடிக்காத புதிதாக ஷெட் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக நான்கு பக்கமும் நில மட்டம் வரை கான்கிரீட் பில்லர்கள் அமைத்து, அதன் மீது, 30 அடிக்கு நான்கு பக்கம் இரும்பு ஆங்கில்கள் அமைக்கப்பட்டன.
ஆங்கிலை சுற்றியும் ஜிங் ஷீட் ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியானது, கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தற்போது அனைத்து பணிகளும் செய்து முடித்து, தேருக்கு முழுமையாக ஷெட் அமைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.