/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாஸ்மாக் பாரில் மோதல்: இரு தரப்பினர் மீதும் வழக்கு
/
டாஸ்மாக் பாரில் மோதல்: இரு தரப்பினர் மீதும் வழக்கு
டாஸ்மாக் பாரில் மோதல்: இரு தரப்பினர் மீதும் வழக்கு
டாஸ்மாக் பாரில் மோதல்: இரு தரப்பினர் மீதும் வழக்கு
ADDED : பிப் 13, 2024 11:00 PM
கோவில்பாளையம்:டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட மோதலில், பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் பார் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவில்பாளையம் அருகே வெள்ளானைப் பட்டியில் டாஸ்மார்க் மதுக்கடை உள்ளது. இங்கு கடந்த 10ம் தேதி இரவு பா.ஜ., இளைஞரணி நிர்வாகி சுரேஷ்குமார் உள்ளிட்ட சிலர் சென்று இரவு 10:00 மணிக்கு மேல் மது விற்பனை செய்வது குறித்து வாக்குவாதம் செய்துள்ளனர். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பார் ஊழியர்களுக்கும், பா.ஜ., தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கோவையில் இருந்து வந்த சிறப்பு போலீசார் இரு தரப்பினரையும் விலக்கி கலைந்து போக செய்தனர்.
இதுகுறித்து பா.ஜ., இளைஞரணி நிர்வாகி சுரேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், பார் ஊழியர்கள் நான்கு பேர் மீது, கைகளால் தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பார் ஊழியர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில், பா.ஜ., இளைஞர் அணி நிர்வாகி சுரேஷ்குமார் உள்பட நான்கு பேர் மீது கைகளால் தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இரு தரப்பினரிடமும் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

