/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தவறான இடத்தில் வழிகாட்டியால் குழப்பம்
/
தவறான இடத்தில் வழிகாட்டியால் குழப்பம்
ADDED : நவ 05, 2024 11:15 PM

வால்பாறை; வழிகாட்டி பலகை இடமாற்றி வைக்கப்பட்டதால், சுற்றுலாபயணியர் குழப்பமடைந்துள்ளனர்.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகமுள்ளது. ரொட்டிக்கடை, வால்பாறை நகர், சோலையாறுடேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட தங்கும்விடுதிகள் உள்ளன.
இந்நிலையில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் செல்லும் இடங்களின் துாரம் குறித்தும், காண வேண்டிய இடம் குறித்தும், வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அங்கங்கே வழிகாட்டி பலகை வைத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வால்பாறை நகரில் வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையால் சுற்றுலா பயணியர் குழப்பமடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் வழிகாட்டி பலகையை கண்டு, அந்த வழியாக தங்களது பயணத்தை தொடர்கின்றனர். வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வைக்கப்பட வேண்டிய வழிகாட்டி பலகையை, சுற்றுலாத்துறை அதிகாரிகள், ஸ்டேன்மோர் சந்திப்பில் (மூன்று ரோடுகள் சந்திக்கும் இடம்) தவறுதலாக வைத்துள்ளனர்.
இதனால், இந்த பெயர் பலகையை கண்டு, வழித்தடம் மாறி சுற்றுலா பயணியர் செல்கின்றனர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையை புதிய பஸ் ஸ்டாண்ட் ரோட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்,' என்றனர்.