/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ச்சலுடன் குழம்பிய மனநிலையா ...உடனே டாக்டரை சந்திக்க அறிவுறுத்தல்

ADDED : நவ 20, 2025 02:44 AM
கோவை: கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் அமீபா பாதிப்பு கோவையில் இல்லை எனினும், பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என, மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு அதிகரித்து, 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
தற்போது, சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்க, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இதுபோன்ற பாதிப்புகள் இல்லை என்றாலும், பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக கேரளா செல்பவர்களும் சுகாதாரமில்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், ''அமீபா காய்ச்சல் பாதிப்பு கோவையில் பதிவாகவில்லை.
தனிப்பட்ட எச்சரிக்கை ஏதும் கொடுக்கவில்லை. எனினும் காய்ச்சல் பாதிப்புகள் கண்காணித்து வருகிறோம். காய்ச்சலுடன் 'ஆல்டர் செ ன்சார் அமீபா' எனும் மனம் குழம்பிய நிலை இருந்தால், தாமதிக்காமல் மருத் துவமனை அழைத்து வரவேண்டும்,'' என்றார்.