/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரைவர், கிளீனரை தாக்கிய மூவர் கைது
/
டிரைவர், கிளீனரை தாக்கிய மூவர் கைது
ADDED : நவ 20, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: கிணத்துக்கடவு அருகேயுள்ள சொலவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரதீப், 21; லாரி கிளீனர். கடந்த, 15ல் இவர் போத்தனூர் -- செட்டிபாளையம் சாலையிலுள்ள மாநகராட்சி கழிவு பண்ணையில், லாரியில் கழிவை கொண்டு செல்லும் பணியில் டிரைவருடன் ஈடுபட்டிருந்தார்.
அங்கு போதையில் வந்த மூவர், லாரியின் கண்ணாடியை உடைத்தனர். இதுகுறித்து கேட்ட பிரதீப் மற்றும் டிரைவரை தாக்கினர்.
பிரதீப் புகாரில் போத்தனூர் போலீசார் விசாரித்து பச்சாபாளையம் மாரிமுத்து, 38, வெள்ளியங்கிரி, 23 மற்றும் செட்டிபாளையம் அகில்ராஜ், 24 ஆகியோரை கைது செய்தனர்.

