/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் விழுந்த இரும்பு உலோக பொருளால் பரபரப்பு
/
சாலையில் விழுந்த இரும்பு உலோக பொருளால் பரபரப்பு
ADDED : அக் 04, 2024 11:35 PM

போத்தனூர்: கோவை, ஈச்சனாரி அருகேயுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றிலிருந்து, இரும்பு உலோகத்தால் ஆன இயந்திர உதிரிபாகம் இரண்டு, நேற்று மதியம் டிரெய்லர் லாரியில், சுந்தராபுரம் நோக்கி கொண்டு வரப்பட்டது.
சிட்கோ நுழைவாயிலை தாண்டி, சிறிது தொலைவில் வரும்போது உதிரிபாகத்தில் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையில் சென்ற ஸ்கூட்டர் மீது விழுந்தது. தொடர்ந்து, அவ்வழியே வந்த காரின் முன் கதவில் மோதியதில், கதவு சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக ஸ்கூட்டரில் வந்தவர் காயமின்றி உயிர் தப்பினார். அவ்வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து உதிரிபாகம் லாரியில் ஏற்றப்பட்டு, கொண்டு செல்லப்பட்டது, இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.