/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடி; தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
/
பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடி; தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடி; தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடி; தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 30, 2025 11:57 PM

வால்பாறை; வால்பாறை காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில் நிலவும் இடநெருக்கடியால், அரசு பஸ் டிரைவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பல்வேறு வழித்தடங்களில், 44 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன் நல்லகாத்து பாலம் அருகே, அரசு போக்குவரத்துக்கழத்தின் சார்பில் பணிமனையுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
ஆனால், வால்பாறை நகரில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் பஸ் ஸ்டாண்ட் இருப்பதாலும், பள்ளத்தில் அமைந்துள்ளதாலும், பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறி, பயணியர் புறக்கணித்தனர்.
இதனால், பொள்ளாச்சி, கோவை, பழநி, திருப்பூர், மண்ணார்காடு, சேலம் செல்லும் பஸ்கள் மட்டும் பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படுகின்றன. காந்தி சிலை வளாக பஸ் ஸ்டாண்ட் மிகவும் குறுகலான இடத்தில் உள்ளதாலும், ஆக்கிரமிப்புகளாலும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.
மேலும், ஒரே நேரத்தில் மூன்று பஸ்கள் மட்டுமே நிற்க முடியும். இதனால், அரசு பஸ் டிரைவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இடநெருக்கடியால் பயணியர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
காந்திசிலை வளாகத்தில் நிலவும் இடநெருக்கடியை சமாளிக்க, எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களை முறைப்படுத்த வேண்டும். முடீஸ், பன்னிமேடு, ஹைபாரஸ்ட், சின்கோனா, பெரியகல்லார், சின்னக்கல்லார், ரயான் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்கள், காந்தி சிலை வளாகத்தில் இருந்து இயக்க வேண்டும்.
ேஷக்கல்முடி, சோலையாறுடேம், வில்லோனி, இஞ்சிப்பாறை, குரங்குமுடி பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் ஸ்டேன்மோர் சந்திப்பில் இருந்து இயக்க வேண்டும். அக்காமலை, வெள்ளமலை, கருமலை செல்லும் பஸ்கள் வழக்கம் போல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்தே இயக்க வேண்டும். அப்போது தான் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
இவ்வாறு, கூறினர்.