/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்மஸ்ரீ விருது பெற்ற பத்ரப்பனுக்கு வாழ்த்து
/
பத்மஸ்ரீ விருது பெற்ற பத்ரப்பனுக்கு வாழ்த்து
ADDED : ஜன 29, 2024 12:52 AM

கோவை;பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு இ.கம்யூ., சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கோவை, மேட்டுப்பாளையம் தாசம்பாளையத்தை சேர்ந்தவர் பத்ரப்பன். வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியர். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத் திருவிழாக்களில், வள்ளி கும்மி எனும் கிராமிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இ.கம்யூ., கட்சியை சேர்ந்தவர். இவரது கலைத்திறமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டி, ஏற்கனவே தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.
பத்மஸ்ரீ விருது வழங்கியதையடுத்து, இ.கம்யூ., மாநிலப் பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசாமி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.