/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் 3ம் ஆண்டு மாணவர்கள் சபாஷ்
/
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் 3ம் ஆண்டு மாணவர்கள் சபாஷ்
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் 3ம் ஆண்டு மாணவர்கள் சபாஷ்
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் 3ம் ஆண்டு மாணவர்கள் சபாஷ்
ADDED : ஏப் 23, 2025 11:14 PM

கோவை; பச்சாபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, இறுதி ஆண்டு என, நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.
ஆண்கள் மற்றும் பெண்கள் என, இரு பாலரும், 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1,500 மீ., குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும், 400 மீ., 1,600 மீ., தொடர் ஓட்டம் போட்டிகளில் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை மூன்றாம் ஆண்டு குழு தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ராபி சுஜின் ஜோஸ் பரிசு வழங்கினார். கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்னராஜ், உடற்கல்வி இயக்குனர் வேலுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.