/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்து தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி
/
பத்து தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி
பத்து தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி
பத்து தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி
ADDED : மார் 22, 2026 09:47 PM

கோவை: காங்கிரஸ் போட்டியிட கோரும், 90 தொகுதிகள் கொண்ட பட்டியலில் கோவையில் உள்ள மூன்று தொகுதிகள் இடம் பெற்று இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தொகுதி பங்கீட்டில், 28 இடங்களை பெற்றுள்ளது. எந்தெந்த தொகுதி என்று இன்னும் முடிவாகாத நிலையில், டில்லியில் தயாரிக்கப்பட்ட பெரிய பட்டியல், இன்று தி.மு.க.விடம் காங். சார்பில் அளிக்கப்படவுள்ளது.
இந்த பட்டியலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், சிங்காநல்லுார், கோவை வடக்கு, கிணத்துக்கடவு ஆகிய மூன்று தொகுதிகள் இடம் பெற்று இருப்பதாக கட்சியினர் அடித்துச் சொல்கின்றனர்.
இந்த தொகுதிகளில் போட்டியிட, காங். அகில இந்திய பொதுச்செயலாளர் மயூரா ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், காங். வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் மற்றும் கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழக காங். மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கூறியதாவது:
காங்கிரஸ் போட்டியிடும், 90 தொகுதிகள் கொண்ட பட்டியலை தி.மு.க.விடம் கொடுக்க இருக்கிறோம். இந்த பட்டியலை டில்லியில் உள்ள காங். மேல் மட்ட தலைவர்கள் தயாரித்து கொடுத்துள்ளனர்.
கோவையை பொறுத்தவரை, வடக்கு தொகுதி காங்கிரசுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இங்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. சிங்காநல்லுார் தொகுதியை மா.கம்யூ.வும், கிணத்துக்கடவு தொகுதியை ம.தி.மு.க.வும் கேட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.

