/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாத்திரங்களில் ஐ.எஸ்.ஐ., இருக்கிறதா... செக் பண்ணுங்க!பாதுகாப்பை வலியுறுத்துகிறது பி.ஐ.எஸ்.,
/
பாத்திரங்களில் ஐ.எஸ்.ஐ., இருக்கிறதா... செக் பண்ணுங்க!பாதுகாப்பை வலியுறுத்துகிறது பி.ஐ.எஸ்.,
பாத்திரங்களில் ஐ.எஸ்.ஐ., இருக்கிறதா... செக் பண்ணுங்க!பாதுகாப்பை வலியுறுத்துகிறது பி.ஐ.எஸ்.,
பாத்திரங்களில் ஐ.எஸ்.ஐ., இருக்கிறதா... செக் பண்ணுங்க!பாதுகாப்பை வலியுறுத்துகிறது பி.ஐ.எஸ்.,
ADDED : மார் 22, 2026 09:48 PM

கோவை: தரம் குறைந்த உலோகப் பாத்திரங்களை உணவு சார்ந்த தேவைகளுக்குப் பயன்படுத்தும்போது அவை உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன. ஆகவே ஐ.எஸ்.ஐ., முத்திரையிடப்பட்ட சமையலறை உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்தி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்.,) கூறுகிறது. அலுமினிய பாத்திரங்கள் இல்லாத இடமே இல்லை. வீட்டு உபயோகம், வர்த்தக உபயோகம் என நீக்கமற நிறைந்திருக்கிறது. அலுமினிய பாத்திரத்தில், 99.5 சதவீதம் அலுமினியம் இருக்க வேண்டும். மெக்னீசியம், லெட், காப்பர் போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டினால், அது உடல்நலத்தைப் பாதிக்கும்,''.
''சமையல் பாத்திரங்கள், சமையலறை உபகரணங்களுக்கு அவற்றைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள், வடிவமைப்பு, அளவு என அனைத்துக்கும் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தந்த தர அளவுகோலைப் பூர்த்தி செய்யும் பொருட்களுக்கு மட்டுமே ஐ.எஸ்.ஐ., முத்திரை வழங்கப்படுகிறது,'' என்கிறார், பி.ஐ.எஸ்., கோவை கிளை தலைவர் பவானி.
இவர்கள் ஒருமுறை ஐ.எஸ்.ஐ., வழங்கி விட்டால், அத்தோடு நின்றுவிடுவதில்லை. தயாரிப்புக் கூடத்திலேயே அந்தப் பொருளை மீண்டும் பரிசோதிக்கிறார்கள். வெளிச் சந்தையில் வாங்கி மீண்டும் பரிசோதிக்கிறார்கள். இப்படி அடிக்கடி பரிசோதிக்கும்போது, தர அளவுகளில் மாறுதல் தெரிந்தால், ஐ.எஸ்.ஐ., முத்திரையைப் பயன்படுத்த தற்காலிகமாக தடை அல்லது நிரந்தர தடை விதிக்கிறார்கள்.
''குறிப்பிட்ட தடிமன் இருக்க வேண்டும். சாதாரண சந்தைகளில், தட்டித்தட்டி உருவாக்கப்படும் லேசான அலுமினிய பாத்திரங்கள் விற்கப்படுகின்றன. அவை, தரக்குறைவானவை. அனோடைஸ்டு கோட்டிங் என, அலுமினிய பாத்திரங்களில் பூசப்படும். இவை தரம் குறைந்தால், உரியத் தொடங்கும். உணவில் கலந்து உடல்நலத்தைப் பாதிக்கும்,'' என்று அதிர்ச்சி அளிக்கிறார் பவானி.
மேலும் அவர் கூறியதாவது:
நான்ஸ்டிக் பாத்திரங்களுக்கும் தர அளவுகள் உள்ளன. பாத்திரங்களை மூட கண்ணாடி போன்ற மூடிகள் உள்ளன. அவை ஒருவேளை உடைந்தால், கீறல் கீறலாக உடையக்கூடாது.
கத்தி முனை போன்று கூர்மையாக உடையக்கூடாது. கற்கண்டு போல துண்டுகளாக உடைய வேண்டும் என, ஒவ்வொரு பொருளுக்கும் தடிமன், அளவு, வடிவமைப்பு, வெப்ப, குளிர் தாங்கு திறன், எடை தாங்கு திறன், கைப்பிடி, பூச்சு என தர நிர்ணயம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் ஐ.எஸ்.ஐ., தரம் கொண்ட பொருட்களை மட்டும் வாங்கிப் பயன்படுத்தி, ஆரோக்கியத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

