/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அரசுகளை 90 முறை கலைத்த காங்.,: பா.ஜ.,தேசிய செயலாளர் பேச்சு
/
மாநில அரசுகளை 90 முறை கலைத்த காங்.,: பா.ஜ.,தேசிய செயலாளர் பேச்சு
மாநில அரசுகளை 90 முறை கலைத்த காங்.,: பா.ஜ.,தேசிய செயலாளர் பேச்சு
மாநில அரசுகளை 90 முறை கலைத்த காங்.,: பா.ஜ.,தேசிய செயலாளர் பேச்சு
ADDED : ஜன 24, 2025 06:44 AM

கோவை : ''உலக நாடுகளே வியக்கும் அளவில் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் அரசியல் சட்டத்தை கையாள தெரியாமல், 90 முறை மாநில அரசுகளை கலைத்துள்ளது காங்.,கட்சி,'' என்று பா.ஜ.,தேசிய செயலாளர் அனில் ஆண்டனி பேசினார்.
பா.ஜ., அரசியல் அமைப்பு சட்ட கவுரவ இயக்கம் சார்பில், கோவையில் கருத்தரங்கு நடந்தது. இதில் பா.ஜ.,தேசிய செயலாளர் அனில் ஆண்டனி பேசியதாவது:
நம் நாட்டின் அரசியல் சாசனமும், அரசியல் சட்டமும் ஏழை அடித்தட்டு மக்களுக்கு உரிமையை முழுமையாக வழங்குகிறது. வலிமை பொருந்திய இறையான்மையை கொண்டது. மக்களாட்சிக் கோட்பாட்டின்படி ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது, பல்வேறு மாநில அரசுகளின் ஆட்சியை, 90 முறை கலைத்து கவர்னரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். வலிமையான உலகநாடுகளே வியக்கும் வகையில் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் அரசியல் சட்டத்தை சரியாக கையாள தெரியாமல் காங்., கட்சி மாநில அரசுகளின் ஆட்சியை கலைத்துள்ளது.இது தான் காங்., கட்சியின் சாதனை.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில துணைத்தலைவர் துரைசாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.