நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நிர்வாகிகள் கூட்டம், கீதா ஹால் ரோட்டில் உள்ள மாநகர காங்., அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த வடக்கு மாவட்ட தலைவர் ரங்கராஜன் கூறுகையில், ''மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு, மீண்டும் அந்த பெயரை வைக்க கோரி போராட்டங்களை நடத்துமாறு, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளளார். அதன்படி வரும் பிப்., 25 வரை தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்,'' என்றார்.

