ADDED : ஜன 13, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
போத்தனூர்: கோவை மாநகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.எஸ்.ஐ. கோபி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் சிட்கோ மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மது விற்கப்படுகிறதா என கண்காணித்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை விசாரித்தனர்.
போத்தனூர், சீனிவாசா நகர் அடுத்த ரங்கநாதபுரத்தை சேர்ந்த விஜயகுமார், 32 என்பதும் விற்பனைக்காக, 1.28 கி.கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது. கஞ்சாவுடன் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை தேடுகின்றனர்.
