/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 17, 2025 11:00 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், கோவை தெற்கு மாவட்ட காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை சொத்து பரிவர்த்தனையில் பண மோசடி நடந்துள்ளதாக மத்திய அமலாக்கத்துறை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது. அதில், லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல், காங்., முன்னாள் தலைவர் சோனியா ஆகியோரின் பெயர்களை சேர்த்துள்ளதற்கு, கோவை தெற்கு மாவட்ட காங்., கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் கண்டன உரையாற்றினர். நகர, வட்டார தலைவர்கள் கலந்து கொண்டனர்.

