/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசை கண்டித்து காங்., கட்சி ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து காங்., கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 10, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மற்றும் வன்முறையாளர்களை கைது செய்யாததை கண்டித்தும், மணிப்பூர் மாநில பா.ஜ., அரசு, மத்திய அரசை கண்டித்து, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கந்தசாமி பேசினார்.
மாநில பார்வையாளர் மாரியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, கணேசன், காளீஸ்வரன், நகர வட்டார தலைவர்கள் செந்தில்குமார், அமீர், தமிழ்செல்வன், மகாலிங்கம், ஆகியோர் பங்கேற்றனர்.