/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மசோதாவை ரத்து செய்ய காங்., கட்சி ஆர்ப்பாட்டம்
/
மசோதாவை ரத்து செய்ய காங்., கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 17, 2025 11:56 PM

வால்பாறை, ; சுற்றுச்சூழல் நுண் உணர்வு மசோதாவை ரத்து செய்ய கோரி, காங்.,கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வால்பாறை நகர காங்., கட்சி சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் நுண் உணர்வு மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வால்பாறை காந்திசிலை வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, காங்., கட்சியின் நகர தலைவர் அமீர் தலைமை வகித்தார். ஐ.என்.டி.யு.சி., மாவட்ட துணைத்தலைவர் கருப்பையா, பொதுச்செயலாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், காங்., கமிட்டியின் சிறுபான்மைத்துறை மாநில தலைவர் முகம்மது ஆரிப், கோவை தெற்கு மாவட்ட தலைவர் ஹாரூன், வால்பாறை ம.தி.மு.க., நகர செயலாளர் கல்யாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.