UPDATED : அக் 09, 2026 07:45 PM
ADDED : அக் 09, 2026 07:42 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் மற்றும் ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள், புதுடில்லியில் நடத்திய போராட்டத்தில், மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட பார்வையாளர் முருகேசன் பேசினார். முன்னாள் மாவட்ட தலைவர் பகவதி, முன்னாள் இளைஞர்கள் காங்., மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட நிர்வாகிகள், கோபாலகிருஷ்ணன், பஞ்சலிங்கம் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
