UPDATED : அக் 09, 2026 08:38 PM
ADDED : அக் 09, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: இரு தொகுதிகளில், இடைத்தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற்றதை தொடர்ந்து, பொள்ளாச்சி, கிணத்துக்கடவில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தமிழகத்தில் கடந்த, 6ம் தேதி, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இரண்டு தொகுதிகளிலும், த.வெ.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே, த.வெ.க., கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், த.வெ.க.,வினர் விசில் ஊதியும், பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
