/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங். சொத்து பாதுகாப்பு குழு ஆய்வு
/
காங். சொத்து பாதுகாப்பு குழு ஆய்வு
ADDED : ஆக 20, 2025 01:23 AM
கோவை; காங்., கட்சியின் சொத்துக்களை நிர்வகிப்பது, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்து சொத்து பாதுகாப்பு குழு ஆய்வு செய்து வருகிறது. கோவை மாவட்டத்தில், அக்குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். குழு தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு, 'இண்டி' கூட்டணி பொது வேட்பாளரை அறிவித்துள்ளது. மத்திய பா.ஜ., அரசு தமிழகத்துக்கு நன்மை செய்யவில்லை. ஏழை குழந்தைகள் படிக்கும் திட்டத்தை காங்., கொண்டு வந்தது. அதை நிறைவேற்றுவது மத்திய அரசின் கடமை.
பா.ஜ., ஆளும் மாநிலத்துக்கு ஒரு நிலைபாடு, பிற மாநிலங்களுக்கு ஒரு நிலைபாடு என்றிருப்பதை கண்டிக்கிறோம். வரும் தேர்தலில் காங்., -தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்; கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. எங்கள் கட்சிக்குள் எந்த பூசலும் இல்லை. ஒரு மாநிலத்தில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தவறை மறைக்க, பல்வேறு வேலைகளை செய்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அகில இந்திய காங்., செயலாளர் 'மயூரா' ஜெய குமார், மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார்,மாவட்ட தலைவர் கருப்பு சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.