/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மெட்ரோ ரயில்' திட்டத்தில் 6 வழிகளை இணையுங்கள்
/
'மெட்ரோ ரயில்' திட்டத்தில் 6 வழிகளை இணையுங்கள்
ADDED : ஜன 21, 2025 10:18 PM
- நமது நிருபர் -
கோவை 'மெட்ரோ ரயில்' வழித்தடத்தில் விடுபட்ட ஆறு சாலைகளை இணைக்கக் கோரி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால்க்கு, மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: 'மெட்ரோ ரயில்' திட்டத்தில், வெள்ளலுார், பொள்ளாச்சி ரோடு மற்றும் கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் விடுபட்டுள்ளன. வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இப்பகுதிகள் மிகவும் முக்கியம்.
கோவை - மேட்டுப்பாளையம் ரோடு ஊட்டி மற்றும் கர்நாடகாவை இணைக்கிறது. சத்தி ரோடு மைசூரை இணைக்கிறது. அவிநாசி ரோடு திருப்பூர் மற்றும் சேலம் செல்வதற்கான வழித்தடம்.
திருச்சி ரோட்டில் பல்லடம் வழியாக தாராபுரம், பல்லடம் செல்லலாம். பொள்ளாச்சி வழியாக வால்பாறை, ஆனைமலை மற்றும் கேரளாவை அணுகலாம். பாலக்காடு சாலை வழியாக வாளையார் செல்லலாம்; இது கேரளாவின் நுழைவாயில்.
தற்போதைய மெட்ரோ ரயில் திட்டம், அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் விரிவடையும் வணிகத் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை. கோவையின் விரைவான வளர்ச்சி, போக்குவரத்து சவால்களை கருத்தில் கொண்டு, குறிப்பிட்டுள்ள ஆறு வழித்தடங்களை சேர்க்க, 'மெட்ரோ ரயில்' திட்டத்தை திருத்துவது முக்கியம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.