/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்குவாரி அனுமதிப்பதை பரிசீலனை செய்யணும்! சப் - கலெக்டரிடம் வலியுறுத்தல்
/
கல்குவாரி அனுமதிப்பதை பரிசீலனை செய்யணும்! சப் - கலெக்டரிடம் வலியுறுத்தல்
கல்குவாரி அனுமதிப்பதை பரிசீலனை செய்யணும்! சப் - கலெக்டரிடம் வலியுறுத்தல்
கல்குவாரி அனுமதிப்பதை பரிசீலனை செய்யணும்! சப் - கலெக்டரிடம் வலியுறுத்தல்
ADDED : அக் 14, 2025 01:11 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கல்குவாரி அமைக்க அனுமதி வழங்குவதை பரிசீலனை செய்ய வேண்டும், என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
பொள்ளாச்சி பா.ஜ. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் பரமகுரு, பா.ஜ. நகர தலைவர் கோகுல்குமார் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி நகரில், ராஜாமில் ரோடு, பத்ரகாளியம்மன் கோவில் வீதி, சத்திரம் வீதி, மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ளிட்ட பல இடங்களில் ரோடுகள் பள்ளங்களாக உள்ளன. இது குறித்து ஒன்பது முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் மோசமாக உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. ரோட்டிலுள்ள பள்ளங்களால் விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே, ரோடுகளை தரத்துடன் சீரமைக்க வேண்டும். உருக்குலைந்த ரோட்டை தோண்டி அகற்றி, மீண்டும் புதிய ரோடு அமைக்க வேண்டும். மாறாக, பழைய ரோட்டின் மீது புதிய ரோடு போடுவதால், விரைவில் சேதமடைகிறது. மேலும், வீடுகள், கடைகள், ரோட்டின் மட்டத்துக்கு கீழே சென்று விடுகின்றன. இதனால், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் பொள்ளாச்சி நகரத்துக்குள் மக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே, காலை, 8:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை பொள்ளாச்சி நகரத்துக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்.
நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெரிய மைதானத்தை மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வந்தனர்.தற்போது தமிழக அரசு சார்பில், மினி ஸ்டேடியம் குறைவான வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் நான்கு ஆண்டுகளாக நடக்கிறது. இதனால், மாணவர்கள் மைதானத்தை பயன்படுத்த முடிவதில்லை.
400 மீ. சின்தடிக் ஓடுதளம், இடையே கால்பந்து மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தி ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சூலக்கல் சென்னியூர் அழகிரி செட்டிபாளையத்தை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
கிணத்துக்கடவு சூலக்கல்லில், தனிநபர்கள் குவாரி, கனிம இருப்பு கிடங்கு அமைக்க விண்ணப்பித்துள்ளனர். இப்பகுதி விவசாயப்பகுதி என்பதால், ஆடு, மாடு, பிற கால்நடைகள் பாதிக்கப்படுவதோடு, விவசாய விளை பொருட்களும் பாதிக்கப்படும்.
சுற்றுச்சூழல் மாசுபட்டு, பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கப்படும். இதற்கு அனுமதி வழங்கும்பட்சத்தில், நீர்நிலை மாசு உட்பட சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகள் உட்பட பொதுமக்களின் உடல்நிலையும் பாதிக்கப்படும். எனவே, அனுமதி வழங்குவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு, வலியுறுத்தப்பட்டு உள்ளது.