/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 14, 2025 01:13 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு, பணியாளர்களுக்கு அகவிலைப்படியை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசும் வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படியை அறிவிக்க வேண்டுமென, தமிழகம் முழுவதும் நேற்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொள்ளாச்சி வட்டக்கிளை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சின்னமாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
தமிழக அரசு, ஜூலை முதல், மூன்று சதவீதம் அகவிலைப்படியை முன் தேதியிட்டு தீபாவளி பண்டிகை போனஸ்சாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கிளை செயலாளர் கிட்டான் நன்றி கூறினார்.
* கிணத்துக்கடவு தாலுக்கா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், வட்டக்கிளை செயலாளர் அய்யாசாமி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.