UPDATED : நவ 27, 2026 04:40 PM
ADDED : நவ 27, 2026 04:40 PM

கோவை: நேரு நகர், சுகுணா கல்வி நிறுவன வளாகத்தில், ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கான அரசியல் அமைப்பு தின கருத்தரங்கம் நடந்தது. கோவை பேரூராட்சி மக்கள் பிரதிநிகள் பங்கேற்றனர்.
சென்னை பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் முன்னாள் கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்திய அரசியலைமைப்பின் முக்கியத்துவம், ஜனநாயகக் கடமைகள், உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமிநாராயணசாமி, தலைவர் சுகுணா, அறக்கட்டளையின் செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குநர் சேகர் முன்னிலை வகித்தனர். கல்லுாரியின் முதன்மையர் மோகனசுந்தரம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக இயக்குனர் சேகர் நன்றியுரை வழக்கினார். சுகுணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ராஜ்குமார், மகுடீஸ்வரன், கோவிந்தராஜன் பங்கேற்றனர்.
