தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டுமானம் - கான்கிரீட் பயிற்சி கனரா பயிற்சி மையம் அழைப்பு

கட்டுமானம் - கான்கிரீட் பயிற்சி கனரா பயிற்சி மையம் அழைப்பு

கட்டுமானம் - கான்கிரீட் பயிற்சி கனரா பயிற்சி மையம் அழைப்பு


ADDED : ஆக 20, 2025 09:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 09:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

கனரா வங்கியின் ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில், கட்டுமானம் மற்றும் கான்கிரீட் பணி தொடர்பான, 30 நாள் பயிற்சி முகாம் துவங்க உள்ளது.

இது குறித்து, கனரா ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் கூறியிருப்பதாவது: திருப்பூர் கனரா பயிற்சி மையத்தில், கட்டுமானம், கான்கிரீட் பணிகள் தொடர்பான பயிற்சி முகாம், 30 நாட்கள் நடக்கிறது. முகாமில் பயிற்சி பெற, எழுத, படிக்க தெரிந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

தங்கும் வசதி, உணவு வசதியுடன் பயிற்சி அளிக்கப்படும்; நிறைவாக, மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சிபெற விரும்புவோர், 'கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், வஞ்சியம்மன் கோவில் அருகில், முதலிபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர்' என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, 94424 13923, 99525 18441, 90804 42586 என்ற எண்களில் அணுகலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us