/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேதியியல் பொருட்களை பயன்படுத்தி கட்டுமான குறைகளுக்கு தீர்வு காணலாம்!
/
வேதியியல் பொருட்களை பயன்படுத்தி கட்டுமான குறைகளுக்கு தீர்வு காணலாம்!
வேதியியல் பொருட்களை பயன்படுத்தி கட்டுமான குறைகளுக்கு தீர்வு காணலாம்!
வேதியியல் பொருட்களை பயன்படுத்தி கட்டுமான குறைகளுக்கு தீர்வு காணலாம்!
ADDED : ஜன 06, 2024 12:39 AM

கட்டட கட்டுமானத்துறையில் வேதியியல் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது பற்றி, கோவை மண்டல கட்டுமான பொறியாளர்(கொஜினா) சங்க பொருளாளர் சோமசுந்தரம் கூறியதாவது:
கட்டட கட்டுமான துறையில், வேதியியல் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களுக்கு நன்மையை அளித்து வருகிறது.
அவற்றின் நன்மை, தீமைகளை பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு கட்டடத்தின் ஆயுளையும் அதிகரிக்க, பெஸ்டிசைட்ஸ் எனப்படும் பூச்சி கொல்லிகள் பயன்படுத்த வேண்டும்.
நீர் கசிவை தடுப்பதற்கு, வாட்டர் ப்ரூப் கெமிக்கல் அவசியம். கம்பிகளில் துருப்பிடிக்காமல் இருக்க ஆன்ட்டி குரோஷிவ் பெயின்ட் மிக முக்கியம்.
கான்கிரீட் இறுகி செட் ஆகும் நேரத்தை,அதிகரிக்கும் குறைப்பதற்கும் பிரத்யேக நிறுவனங்கள் தயாரிக்கும் கெமிக்கல் லிக்யுட்கள் உள்ளன.
கட்டடங்களில் தொற்றிக்கொள்ளும், கரையான் மற்றும் பூச்சிகளை அழிக்க, கட்டடம் கட்டுவதற்கு முன்பும், பின்பும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதற்கு முன்பே, கரையான் மருந்து உட்செலுத்தும் பணிகளை முடிக்க வேண்டும்.
நிலை கதவுகள் மரத்தினால் ஆனவை என்றால், அவற்றிற்கும் கரையான் மருந்தை பிரஷ் கோட்டிங் செய்து கொள்வது நன்மை பயக்கும்.
அடுத்ததாக, நீர்க்கசிவின் தாக்கத்தை முற்றிலும் தவிர்ப்பதற்கு, கட்டுமானத்தின் போது சில வகை வேதியியல் பொருட்களை சேர்த்துக் கொள்வது, நல்ல பயன் தரும்.
கட்டுமானப்பணிகளை முடித்த பிறகு, பிரஷ் கோட்டிங் முறையில் அப்ளை செய்வதும், நல்ல பயன் தரும். கட்டுமானம் முடிந்த பிறகு, நீர் கசிவு இருப்பின் அவற்றை பிரஷர் கிரவ்டிங் கோட்டிங் என, இரண்டு வகைகளில் சரி செய்யலாம்.
இப்படி கட்டடங்களுக்கு முறையாக, ரசாயன பொருட்களை பயன்படுத்தினால், கட்டடத்தின் ஆயுட்காலம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.