/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம்; பஸ் இயக்க டிரைவர்கள் திணறல்
/
சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம்; பஸ் இயக்க டிரைவர்கள் திணறல்
சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம்; பஸ் இயக்க டிரைவர்கள் திணறல்
சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம்; பஸ் இயக்க டிரைவர்கள் திணறல்
ADDED : ஆக 06, 2025 10:06 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு, 85க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த டவுன் பஸ்களை நம்பியே, சுற்றுப்பகுதி கிராம மக்கள், அலுவலகம், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர்.
ஆனால், பல கிராமங்களில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை வரை, வீட்டின் சுற்றுச்சுவர்களை விரிவுபடுத்துவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால், குடியிருப்பை ஒட்டிய சாலையில், சீராக பஸ்களை இயக்க முடியாமல் டிரைவர்கள் திணறுகின்றனர்.
இது குறித்து, அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது:
சமீபத்தில் ஒடையகுளம் கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு காரணமாக, வீட்டை ஒட்டிய சாலை வளைவில் பஸ்சை திருப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பஸ்சை எளிதாக இயக்கும் வகையில், ஆக்கிரமிப்பை அகற்ற ஊராட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், சாலை வளைவில், சுற்றுச் சுவர், இடித்து மாற்றியமைக்கப்பட்டது.
இதேபோன்று, மஞ்சநாயக்கனுார் உள்ளிட்ட பல கிராமங்களில், சாலையை ஒட்டியுள்ள வீடுகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளது. எதிரே கனரக வாகனங்கள் வந்தால், வழிவிட்டு செல்லவும் இடம் இருப்பதில்லை. சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சுவர், கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.