/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவித்தபடி கூலி உயர்வு வழங்க கோரி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
/
அறிவித்தபடி கூலி உயர்வு வழங்க கோரி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
அறிவித்தபடி கூலி உயர்வு வழங்க கோரி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
அறிவித்தபடி கூலி உயர்வு வழங்க கோரி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
ADDED : ஆக 06, 2025 10:05 PM

வால்பாறை; வால்பாறை நகராட்சியில், 52 துாய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு, பி.எப்.,பிடித்தம் போக, 450 ரூபாய் தினக் கூலியாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், துாய்மை பணியாளர்களுக்கு, கலெக்டர் அறிவித்துள்ள கூலி, 700 ரூபாய் வழங்க வேண்டும். குப்பை அள்ளும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 4ம் தேதி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசி தீர்வு காணப்படும் என இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் கணேசன் போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களிடம் பேச்சு நடத்தினார்.
அப்போது, 'உங்களின் நியாயமான கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். நாளை (8ம் தேதி) ஒப்பந்ததாரரிடம் இந்த பிரச்னை குறித்து பேசி தீர்வு காணப்படும். பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்து, நகராட்சியின் நேரடி கண்காணிப்பில் துாய்மை பணியாளர்கள் பணிபுரியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
கமிஷனரின் உறுதியை ஏற்று துாய்மை பணியாளர்கள் நேற்று மதியம், 2:00 மணிக்கு வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.