/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான கண்காட்சி; கோவையில் இன்று துவக்கம்
/
கட்டுமான கண்காட்சி; கோவையில் இன்று துவக்கம்
ADDED : நவ 21, 2024 09:49 PM
கோவை; கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக இன்று முதல் வரும் 24ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு கொடிசியா வளாகத்தில் மாபெரும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடக்கிறது.
இக்கண்காட்சியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, இந்திய கட்டுமான சங்கத்தின் தேசிய தலைவர் பொறியாளர் விஸ்வநாதன் ஆகியோர் துவக்கிவைக்கின்றனர்.
கண்காட்சியில், இறக்குமதி செய்யப்பட்ட கிரானைட் மற்றும் மார்பில் கற்கள், நவீன மின்சாதனங்கள், இயற்கை கட்டுமானம், நவீன பயோ செப்டிக் டேங்க், நவீன நிலத்தடி நீர்தேக்கத்தொட்டி, புதுமையான லிப்ட்கள், புதிய வகை தரைத்தள டைல்ஸ் மற்றும் வீட்டு உள்அலங்காரப் பொருட்கள் போன்ற 150க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கட்டுமானத்துறை வல்லுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள் மூன்று நாட்களும் நடைபெறவுள்ளன.
இக்கண்காட்சியை காலை 10:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை பார்வையாளர்கள் பார்க்கலாம். அனுமதி இலவசம். பங்கேற்கும் அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.