/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமானம், வீட்டுமனை, பர்னிச்சர் ஒரே இடத்தில் 3 வகை கண்காட்சி
/
கட்டுமானம், வீட்டுமனை, பர்னிச்சர் ஒரே இடத்தில் 3 வகை கண்காட்சி
கட்டுமானம், வீட்டுமனை, பர்னிச்சர் ஒரே இடத்தில் 3 வகை கண்காட்சி
கட்டுமானம், வீட்டுமனை, பர்னிச்சர் ஒரே இடத்தில் 3 வகை கண்காட்சி
ADDED : செப் 27, 2025 12:52 AM

கோவை; சொந்த வீடு கட்டுவோருக்கு உதவும் வகையில், கட்டுமானம், வீட்டுமனை மற்றும் பர்னிச்சர் கண்காட்சியை ஒருங்கிணைத்து, கோவை கொடிசியா அரங்கில் கண்காட்சி நேற்று துவங்கியது. நாளை நிறைவு பெறுகிறது.
பில்ட் எக்ஸ்போ ஆர்க்கிடெக்சர், கட்டடம் மற்றும் உள்அலங்காரம் ஆகிய பிரிவுகளுக்கான அரங்குகள் உள்ளன. புதிய தொழில்நுட்பங்கள், கட்டுமான முறைகள், கட்டுமானத்துக்கு தேவையான உபகரணங்கள், கதவு, ஜன்னல் உள்ளிட்ட அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டுமனை கண்காட்சி கண்காட்சியில், ரூ.5 லட்சம் முதல் 5 கோடி வரையிலான வீட்டு மனைகள் குறித்த விவரங்களை அறியலாம். 45க்கும் மேற்பட்ட பிரபல பில்டர்கள், பிளாட் புரோமோட்டர்கள் பங்கேற்கின்றனர்.
பர்னிச்சர் கண்காட்சி புதிய வீடு கட்டியோருக்கும், பழைய வீட்டை அலங்கரிக்க நினைப்போருக்கும் உதவும் வகையில் அமைந்துள்ள பர்னிச்சர் கண்காட்சியில், 80 அரங்குகள் உள்ளன. பார்வையாளர்கள் இன்றும், நாளையும் காலை 10.30 முதல் இரவு 8.30 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவர்.