/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டை ஆக்கிரமிக்கும் கட்டுமான பொருட்கள்; வாகன ஓட்டுநர்கள் திணறல்
/
ரோட்டை ஆக்கிரமிக்கும் கட்டுமான பொருட்கள்; வாகன ஓட்டுநர்கள் திணறல்
ரோட்டை ஆக்கிரமிக்கும் கட்டுமான பொருட்கள்; வாகன ஓட்டுநர்கள் திணறல்
ரோட்டை ஆக்கிரமிக்கும் கட்டுமான பொருட்கள்; வாகன ஓட்டுநர்கள் திணறல்
ADDED : ஜன 02, 2025 08:12 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடுகளில், கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.
பெள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ரோடு குறுகலாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது.
இந்நிலையில், நெரிசல் மிக்க வழித்தடங்களில், புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக கொண்டு வரப்படும் மணல், எம்.சாண்ட், ஜல்லி, செங்கல், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், ரோட்டை ஒட்டி கொட்டப்பட்டு இருப்பு வைக்கப்படுகின்றன.
கட்டடங்கள் கட்டி முடிக்க, பல மாதங்களாகும் நிலையில், கட்டுமான பொருட்கள் குவித்து காணப்படுகிறது. இதனால், குறுகலான ரோடுகளின் பெரும்பகுதியை கட்டுமானப் பொருட்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகின்றன.
புதிய கட்டடங்களுக்கு அனுமதி கொடுக்கும் நகராட்சி அதிகாரிகள், ரோடுகளை ஆக்கிரமிக்கும் கட்டுமான பொருட்களில் கவனம் செலுத்தி, விதிமுறை மீறும் கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
புதிய கட்டடங்கள் கட்டும்போது, கல், மணல், துாசி ஆகியவை, மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க வலை அல்லது தடுக்கு அமைக்க வேண்டும். கட்டுமான பொருட்களை ரோடுகளில் போடக்கூடாது. தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
மகாலிங்கபுரம், கோவை ரோடு என, பல பகுதிகளில்இத்தகைய விதிகளை மீறியே நகரில், தனியார் கட்டட உரிமையாளர்களின் செயல்பாடு உள்ளது.
இவ்வாறு, கூறினர்.

