/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான பொருட்கள் விலையேற்றம்; கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
கட்டுமான பொருட்கள் விலையேற்றம்; கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்கள் விலையேற்றம்; கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்கள் விலையேற்றம்; கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2024 09:29 PM
கோவை : கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம்(பி.ஏ.ஐ.,), கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கம், கிரெடாய், பேவர் பிளாக் உற்பத்தியாளர்கள் சங்கம், காட்சியா, பொள்ளாச்சி சிவில் இன்ஜினியர்கள் சங்கம்(ஏஸ்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெற்கு தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பினர்.
பி.ஏ.ஐ., தலைவர் கணேஷ்குமார் கூறுகையில், ''எம்.சாண்ட், பி.சாண்ட், கருங்கல் ஜல்லி வகைகள் கடந்த மூன்று மாதங்களில், மூன்று முறை என, 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த உடனடி விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிக்கப்படுகிறது.
தமிழக அரசு இவ்விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் கட்டுமானம் சார்ந்த சங்கங்களை ஒன்றிணைத்து சென்னையில், ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.