/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளி செடிகளுக்கு பந்தல் கட்டும் பணி
/
தக்காளி செடிகளுக்கு பந்தல் கட்டும் பணி
ADDED : செப் 05, 2025 09:52 PM

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில், தக்காளிக்கு பந்தல் கட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில், தக்காளி சாகுபடி அதிகம் உள்ளது. இதில், சிவம், சாகோ, மதன் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் பயிரிடப்படுகிறது.
தற்போது சிங்கையன்புதுார், சொக்கனுார் மற்றும் வடபுதுாரிலிருந்து நெகமம் செல்லும் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், தக்காளி செடிகளில் பந்தல் கட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இது குறித்து சிங்கையன்புதுாரை சேர்ந்த கோபால் என்ற விவசாயி கூறியதாவது: 3 ஏக்கர் பரப்பில், ஆடி மாதத்தில் தக்காளி நடவு செய்துள்ளோம். தற்போது பந்தல் கயிறு கட்டும் பணிகள் துவங்கியுள்ளோம். இன்னும் 20 முதல் 25 நாட்களில் பறிப்பு துவங்கி விடும்.
பயிருக்கு, இயற்கை மற்றும் ரசாயன உரம் என இரண்டும் கொடுக்கிறோம். நடவு, பந்தல், உரம், ஆட்கள் கூலி என, ஒரு ஏக்கருக்கு, 2 லட்சம் வரை செலவுகள் ஆகியுள்ளது.
டிசம்பர் மாத இறுதி வரை பறிப்பு இருக்கும். ஒரு ஏக்கர் பரப்பளவில், 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 பெட்டிகள் வரை வரத்து இருக்கும்
இவ்வாறு, தெரிவித்தார்.