/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை அருகே மேம்பாலம் கட்டியும்.. பயனில்லை! . வேலைகளை விரைந்து முடிக்க கோரிக்கை
/
காரமடை அருகே மேம்பாலம் கட்டியும்.. பயனில்லை! . வேலைகளை விரைந்து முடிக்க கோரிக்கை
காரமடை அருகே மேம்பாலம் கட்டியும்.. பயனில்லை! . வேலைகளை விரைந்து முடிக்க கோரிக்கை
காரமடை அருகே மேம்பாலம் கட்டியும்.. பயனில்லை! . வேலைகளை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஜன 02, 2026 05:11 AM

மேட்டுப்பாளையம்: -: காரமடை அருகே, 28.93 கோடி ரூபாய் செலவில், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் முழுமையாக முடிக்காததால், மக்களுக்கு பயன் இல்லாமல் உள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து, தோலம்பாளையம், வெள்ளியங்காட்டிற்கு, காரமடை நகர் வழியாக செல்ல வேண்டும். அதேபோன்று தோலம்பாளையம், வெள்ளியங்காடு, மருதூர், காளம்பாளையம் ஆகிய பகுதி மக்கள், காரமடை ரயில்வே கேட் மற்றும் காரமடை நகர் பகுதி வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும்.
சாலை மிகவும் குருகலாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் ரயில்கள் வரும்போது, அடிக்கடி கேட் அடைப்பதால், தோலம்பாளையம் காரமடை சாலையில், வாகனங்கள் இரண்டு பக்கமும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
இந்த போக்குவரத்து நெரிசல் சீரமைய, 15 நிமிடங்களுக்கு மேல் ஆகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு, 28.93 கோடி ரூபாய் செலவில், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கியது.
மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே துவங்கி, ரயில் பாதையை கடந்து வெள்ளியங்காடு, தோலம்பாளையம் சாலையை சென்றடையும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதில், 16 இடங்களில் பில்லர்களும், இரண்டு ரீட்டனிங் சுவரும் கட்டப்பட்டு உள்ளன.
மேம்பாலம் சாலைகள், மேட்டுப்பாளையம் சாலையிலும், தோலம்பாளையம் சாலையிலும் முடிவடைகின்றன. பணிகள் முழுமை அடையாமல் உள்ளதால், இரண்டு இடங்களிலும் மண் பாதைகளாக உள்ளன.
பாலம் கட்டியும் மக்களுக்கு பயன் இல்லாமல் உள்ளது. பொதுமக்கள் தற்போது மேம்பாலத்தின் வழியாக, வாகனங்களில் சென்று வருகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் (மேம்பாலம் கட்டுமான பணி) மேட்டுப்பாளையம் சாலையிலும், தோலம்பாளையம் சாலையிலும் ரவுண்டானா அமைக்காமல் உள்ளனர்.
ரவுண்டானா அமைக்கவும், மேம்பாலப் பணிகளை முழுமையாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, பாலத்தை திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என, பொதுமக்கள் கூறினர்.

