/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடை கட்டும் பணி துவக்கம்
/
ரேஷன் கடை கட்டும் பணி துவக்கம்
ADDED : ஜன 29, 2024 11:11 PM
அன்னுார்;கரியாக்கவுண்டனுாரில், ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணி நேற்று துவங்கியது.
வடக்கலுார் ஊராட்சி, கரியாக்கவுண்டனுாரில், வாடகை கட்டிடத்தில், 40 ஆண்டுகளாக ரேஷன் கடை செயல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சொந்த கட்டிடம் கோரி, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கரியாக்கவுண்டனுாரில் ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது.
ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி இப்பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
இங்கு உள்ள ரேஷன் கடையில் 956 ரேஷன் கார்டுகள் உள்ளது. எனவே வடக்கலூரில் தனியாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதில், ஊராட்சி துணைத் தலைவர் சங்கீதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.