/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான சங்கத்தினர் நாளை ஆலோசனை
/
கட்டுமான சங்கத்தினர் நாளை ஆலோசனை
ADDED : டிச 01, 2024 01:17 AM
கோவை: கட்டுமானப் பணிக்கான கருங்கல் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையை, இன்று முதல் உயர்த்த, குவாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போதைய விலை உயர்வை அனுமதித்தால் கட்டுமான செலவு வெகுவாக அதிகரிக்கும். அரசு மற்றும் கட்டுமான திட்டப் பணிகள் பாதியில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசு தலையிட்டு இந்த நிலை உயர்வை தடுத்த நிறுத்த வேண்டும் என, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கம் சார்பிலும், கட்டுமான பணி பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்த்து விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என, தமிழக மணல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, கட்டுமான துறை சார்ந்த சங்கத்தினர் நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.
இதன்படி, பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் (பி.ஏ.ஐ.,) கோவை மைய கிளை, கிரெடாய், சிபாகா, கொசினா, காட்சியா, பேவர்ஸ் அசோசியேஷன் சார்பில், நாளை மாலை புரூக்பாண்ட் சாலையில் உள்ள பி.ஏ.ஐ.,அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர்.