/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெரைட்டி ஹால் ரோடு குடியிருப்பு 3 பிளாக் கட்டுமான பணி துவக்கம்
/
வெரைட்டி ஹால் ரோடு குடியிருப்பு 3 பிளாக் கட்டுமான பணி துவக்கம்
வெரைட்டி ஹால் ரோடு குடியிருப்பு 3 பிளாக் கட்டுமான பணி துவக்கம்
வெரைட்டி ஹால் ரோடு குடியிருப்பு 3 பிளாக் கட்டுமான பணி துவக்கம்
ADDED : ஆக 02, 2025 11:44 PM

கோவை:கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு, வீட்டு வசதி வாரியம் வாயிலாக வெரைட்டி ஹால் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டது.
அதற்குரிய தொகையை தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வாரியத்துக்கு வழங்கப்பட்டது.
அக்குடியிருப்பு கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலானதால், கட்டடத்தில் விரிசல் காணப்பட்டது.
குடியிருக்க லாயக்கற்ற நிலையில் இருந்ததாலும், மழை பெய்தால் இடிந்து விழக்கூடிய அபாயம் இருந்ததாலும், துாய்மை பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பணம் செலுத்தி, பத்திரம் பெற்ற வீடுகள் என்பதால், அவர்களுக்கே ஒதுக்கீடு வழங்கும் வகையில், பயனாளிகள் போட்டோவுடன் உத்தரவு வழங்கப்பட்டது.
தற்காலிகமாக அருகாமையில் உள்ள, சிட்டி ஸ்கூல் மைதானத்தில் கூடாரம் அமைத்து தங்க வைக்கப்பட்டனர்.
அதேயிடத்தில், தரைத்தளம் மற்றும் ஐந்து பிளாக்குகளில், ரூ.55.88 கோடியில், 450 குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக, ரூ.24.16 கோடியில், இரண்டு பிளாக்குகளில், 192 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டதால், அனைவருக்கும் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, தற்போதைய சந்தை மதிப்புக்கேற்ப கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, ஒரே நேரத்தில், மூன்று பிளாக்குகள் கட்டுமான பணி துவக்கப்பட்டுள்ளது.

