/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான பணி தாமதம்; சமுதாயக்கூடத்தில் பாடம்
/
கட்டுமான பணி தாமதம்; சமுதாயக்கூடத்தில் பாடம்
ADDED : பிப் 01, 2025 02:08 AM

வடவள்ளி; லிங்கனூரில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில், கட்டுமான பணிகள் தாமதமாவதால், இடவசதி இல்லாமல், சமுதாயக்கூடத்தில் மாணவர்கள் பாடம் படித்து வருகின்றனர்.
வடவள்ளி, லிங்கனூர், ஓம் கணேஷ் நகரில், மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில், போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால், கடந்தாண்டு, ஜூன் மாதம், 4 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி துவங்கப்பட்டது.
கட்டுமானப்பணி காரணமாக, பள்ளியின் அருகில் உள்ள மாநகராட்சி சமுதாயக்கூடத்தில், கடந்த 7 மாதங்களாக, பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக, புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. வேறு வழியின்றி, எவ்வித வசதியும் இல்லாத சமுதாயக்கூடத்தில், மாணவர்கள் தரையில் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர். எனவே, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து அறிந்த, மாநகராட்சி கமிஷனர் கட்டுமான பணிகளை, 15 நாட்களில் விரைந்து முடிக்க, பொறியாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.