sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி தீவிரம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

/

 புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி தீவிரம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

 புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி தீவிரம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

 புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி தீவிரம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்


ADDED : ஜன 08, 2026 05:55 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் ஏழு கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், புது மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. அதில், புது பஸ் ஸ்டாண்டில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும், பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட புறநகர்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் வந்து செல்கின்றன.

இந்நிலையில், கூடுதலாக புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க அரசு, ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த, 2022ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.

பொள்ளாச்சி சி.டி.சி., மேட்டில், 3.25 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, கடந்த, 2023ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டன.

பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்த வசதிகள், கடைகள், இரண்டு தங்கும் விடுதிகள், பாதுகாப்பு அறை, போக்குவரத்து அலுவலகம், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த மாதம் பஸ் உரிமையாளர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பஸ் ஸ்டாண்டில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள், மாற்றங்கள் குறித்து நேரடி ஆய்வு செய்தனர்.

அப்போது, பஸ்கள் வெளியேறும் பகுதியில் உள்ள நெருக்கடி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பஸ்கள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நகராட்சி கமிஷனர் கூறுகையில், ''சி.டி.சி., மேட்டில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.விரைவில் பணிகளை நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதன்பின், பஸ்கள் இயக்கி சோதனை செய்யப்படும். முறையான அறிவிப்புக்கு பின், பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வரும்,' என்றார்.






      Dinamalar
      Follow us