தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டட தொழிலாளிக்கு கொலை வழக்கில் ஆயுள் சிறை

 கட்டட தொழிலாளிக்கு கொலை வழக்கில் ஆயுள் சிறை

 கட்டட தொழிலாளிக்கு கொலை வழக்கில் ஆயுள் சிறை


ADDED : ஜன 31, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை,மதுக்கரை அருகேயுள்ள சீராபாளையம்புதுார் காலனியை சேர்ந்தவர் சக்திவேல்,48. இவரும், பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரேஷ்,40, என்பவரும் கட்டட வேலைக்கு சென்றனர். கடந்த 2020, மே, 30 ல், வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் சக்தி வேலுவை, இரும்பு குழாயால் சுரேஷ் தாக்கினார். படுகாயமடைந்த சக்திவேலுவை, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சக்திவேலு கீழே விழுந்தததில் படுகாயமடைந்து விட்டதாக அவரது மனைவி மரகதம் போலீசில் புகார் அளித்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், பலமாக தாக்கப்பட்டதில் சக்திவேலு இறந்தது தெரிய வந்தது. மதுக்கரை போலீசார் விசாரித்த போது, சக்திவேல் தாக்கப்பட்டதை மறைக்க, சுரேஷ் மற்றும் பலர் வற்புறுத்தியதால், சக்திவேல் மனைவி மரகதம், போலீசில் பொய் சொன்னது தெரிய வந்தது. இதையடுத்து, சுரேஷ் மற்றும் மரகதம்,45, ஆகியோரை கைது செய்தனர்.

ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. நீதிபதி சிவகுமார், குற்றம் சாட்டப்பட்ட சுரேசுக்கு ஆயுள்சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மர கதம், தனக்கு படிப் பறிவு இல்லை என்றும், இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும், பொய் புகார் கொடுத்ததற்கு மன்னித்து கொள்ளுமாறு நீதிபதியிடம் கூறினார்.

இதையடுத்து, மரகதம் விடுதலை செய்யப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் மோகன்பிரபு ஆஜரானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us