/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனை
/
கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனை
ADDED : ஜூலை 04, 2025 10:24 PM
கோவை; கோவை மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி., சங்க அலுவலகத்தில் நடந்தது; சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து, 9ம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன; கோவை மாவட்டத்தில் ஆறு மையங்களில் நடக்க உள்ளன. அதில், கோவை மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், எல்.பி.எப்., சங்க நிர்வாகி கிருஷ்ண சாமி, ஏ.ஐ.டி.யு.சி., சங்க நிர்வாகி செல்வராஜ், ஹெச்.எம்.எஸ்., சங்க நிர்வாகி மனோகரன், தமிழக மக்கள் சேவா சங்க நிர்வாகி குரூஸ்மேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.